பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, BM-04 எனப்படும் நாட்டின் சமீபத்திய குறுகிய தூர தாக்குதல் வரம்புடைய உந்துவிசை எறிகணையின் மாதிரிப் படம் மற்றும் விவரங்களை வெளியிட்டுள்ளது.
BM-04 அதி மீயொலி வேகத்தில் (மாக் 5 மற்றும் அதற்கு மேல்) பறக்கக் கூடியது.
இது 400 முதல் 1500 கிலோமீட்டர் வரையிலான ஒரு செயல்பாட்டு வரம்பைக் கொண்டு உள்ளது.
உலோகக் கொள்கல ஏவு அமைப்பு மூலம் ஏவப்படும் இந்த இரண்டு நிலை கொண்ட எறிகணையானது எதிரி இலக்கை நோக்கி உந்திச் செல்வதற்குத் திட எரிபொருளைப் பயன்படுத்தும்.
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே தங்கள் ஆயுத இருப்பில் அதி மீயொலி எறிகணைகளைக் கொண்டுள்ளன.