சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் ஜனவரி 01 ஆம் தேதியன்று பிரிக்ஸ் குழுவில் இணைந்தன.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ள 15வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ஐந்து நாடுகளும் BRICS அமைப்பில் இணைய இருந்தன.
அர்ஜென்டினா நாட்டிற்கும் இக்குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டது, ஆனால் டிசம்பர் மாத இறுதியில் அந்நாடு அந்த முடிவில் இருந்து பின்வாங்கியது.
வளர்ந்து வரும் நாடுகளின் BRICS அமைப்பு ஆனது 2006 ஆம் ஆண்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட நிலையில் தென் ஆப்பிரிக்கா 2010 ஆம் ஆண்டில் இக்குழுவில் இணைந்தது.