வளர்ந்து வரும் நாடுகளின் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையப் போவதில்லை என அர்ஜென்டினா அறிவித்துள்ளது.
இந்த கூட்டமைப்பு ஆனது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.
மேற்கத்திய நாடுகள் தலைமையிலான உலகளாவிய அமைப்பினை எதிர்கொள்ளும் முயற்சியில் ஆறு புதிய உறுப்பினர்களை இணைப்பதாக இந்த அமைப்பு அறிவித்தது.
அர்ஜென்டினா, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் உறுப்பினர் அந்தஸ்து 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருந்தது.
அர்ஜென்டினாவின் புதிய அதிபரின் புவிசார் அரசியல் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நோக்கியதாக உள்ளது.