BRICS அமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கியில் (NDB) எகிப்து உறுப்பினராக இணைந்து உள்ளது.
புதிய மேம்பாட்டு வங்கி என்பது 2014 ஆம் ஆண்டில் BRICS அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் இணைந்து நிறுவப்பட்ட பலதரப்பு மேம்பாட்டு வங்கி ஆகும்.
BRICS நாடுகள் மற்றும் பிற பின்தங்கிய, வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள உள் கட்டமைப்பு மற்றும் நிலையான மேம்பாடு சார்ந்த பல முன்னெடுப்புகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டது.
வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தப் புதிய மேம்பாட்டு வங்கியில் உறுப்பினராக இணைந்தன.