6வது BRICSதிரைப்பட விருதுகளானது கோவாவில் நடைபெற்ற 52வது இந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவில் (IFFI)அறிவிக்கப்பட்டது.
முதல்முறையாக, BRICS திரைப்பட விழாவானது IFFI விழாவுடன் இணைந்து நடத்தப் பட்டது.
தென் ஆப்பிரிக்கத் திரைப்படமான “பராகத்” மற்றும் ரஷ்யத் திரைப்படமான “The Sun above me never sets” ஆகியவை சிறந்தத் திரைப்படத்திற்கான விருதைப் பகிர்ந்து கொண்டன.
“Barakat” திரைப்படத்தினை எமி ஜெப்தா என்பவரும் “The sun above me never sets” திரைப்படத்தினை லியுபோவ் போரிசோவா என்பவரும் இயக்கியுள்ளனர்.
மனித உணர்வுகளை சினிமா பாணியில் அற்புதமாக சித்தரித்தது மற்றும் அற்புதமான திரைக்கதை ஆகியவற்றிற்காக வேண்டி இந்தப் படங்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன.
தமிழ் நடிகர் தனுஷ் அசுரன் திரைப்படத்தில் தனது நடிப்பிற்காக சிறந்த நடிகர் விருதினைப் பெற்றார்.