TNPSC Thervupettagam

BS – VI எரிபொருள் விநியோகம் – முதல் நகரம்

April 9 , 2018 2293 days 826 0
  • பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் பாரத் நிலை-VI (Bharat Stage -BS  VI) தரநிலை எரிபொருட்களை (Grade fuel) விநியோகிக்கும் இந்தியாவின் முதல் நகரமாக டெல்லி உருவாகியுள்ளது.
  • டெல்லி-தேசியத் தலைநகர் பகுதிகளில் (Delhi-NCR region) அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டு அளவை குறைப்பதனை நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • நொய்டாவைப் போன்று தேசியத் தலைநகர் பகுதிகளில்  உள்ள நகரங்களான குருகிராம், காஸியாபாத், பரிதாபாத் ஆகிய நகரங்களும், மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே உள்ளிட்ட பிற 13 முக்கிய இந்திய நகரங்களும் 2019 ஆண்டின் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் சுற்றுச் சுழலுக்கு கேடு விளைவிக்காத தூய பாரத் நிலை-VI தரநிலை எரிபொருளை  அமல்பாட்டிற்கு கொண்டு வர உள்ளன.
  • பாரத் நிலை-VI தரநிலை எரிபொருள் பயன்பாட்டை கொண்டு வருவதன் மூலம் இந்தியா யூரோ நிலை VI (Euro stage VI) வாயு உமிழ்வு விதிகளை பின்பற்றி வரும்  அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய  யூனியன் ஆகிய நாடுகள்  அடங்கிய குழுவில் இணையும்.
  • நடப்பில் உள்ள பாரத் நிலை-IV மற்றும் புதிய பாரத் நிலை-VI ஆகிய  வாகன எரிபொருள் விதிமுறைகளுக்கு இடையே உள்ள தரநிலைகளில் உள்ள முக்கிய வித்தியாசங்களாவன.
    • பாரத் நிலை-IV எரிபொருட்கள் 50 ppm (parts per million) சல்பரைக் கொண்டுள்ளன.
    • அதேவேளையில், பாரத் நிலை-V மற்றும் பாரத் நிலை– VI எரிபொருட்கள் 10 ppm மட்டுமே சல்பரைக் கொண்டுள்ளன.
  • இவ்வாறு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாரத் நிலை-VI எரிபொருளானது எரிபொருள் பயன்பாட்டின் போது 80 சதவீதம்  அளவிற்கு   வெளியிடப்படும் சல்பரின் அளவைக் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்