TNPSC Thervupettagam
February 21 , 2018 2340 days 991 0
  • உயிரின மற்றும் வாழிடப் பாதுகாப்பு மதிப்பீடு உட்பட இந்தியாவில் மரபியல், தாவரவியல் ஆய்வுகள், தாவர இனங்களின் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் பாதுகாப்பிற்காக இந்திய தாவரவியற் கணக்கெடுப்பு ஆய்வகம் (Botanical Survey of India - BSI) இங்கிலாந்தின் தேசிய வரலாற்று அருட்காட்சியகத்துடன் (Natural History Museum) ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கங்களாவன
    • நகோயா ஒப்பந்தம், CITES உடன்படிக்கை மற்றும் உயிரியல் பல்வகைத்தன்மை மீதான உடன்படிக்கைகளின் இலக்குகளுக்கு ஆதரவை வழங்க அறிவியற் சான்றுகளைப் பயன்படுத்துவதற்கு இருநாடுகளுக்கும் உதவிபுரிதல்
    • உயிர் இனப் பாதுகாப்பு தொடர்பாக இருநாட்டு ஆராய்ச்சியாளர்களின் திறன்களைக் கட்டமைத்தல், இருநாடுகளிடையே ஆராய்ச்சியாளர்களைப் பரிமாற்றிக் கொள்ளுதல், இருசாரரும் அவரவரிடையே பரஸ்பரம் கற்றுக் கொள்ளுதல், தாவரவியற் மூல ஆதாரத்தை பாதுகாப்பதில் இருநாடுகளிடையேயும் இணைந்து செயலாற்றும் தன்மையை அதிகரித்தல்.

இந்திய தாவரவியற் கணக்காய்வு நிறுவனம்

  • நாட்டின் வனவியற் தாவர வளங்கள் மீது தாவரவியற் வகைப்பாட்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உச்ச ஆராய்ச்சி நிறுவனமே இந்திய தாவரவியற் கணக்காய்வு நிறுவனமாகும்.
  • 1890ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நாட்டின் தாவரவியற் மூல வளங்களை ஆராய்ந்து கண்டறிவதே ஆகும்.
  • இந்திய தாவரவியற் கணக்கெடுப்பு ஆய்வு நிறுவனத்தின் கீழ் 9 மண்டல வட்டங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்