மத்திய அமைச்சரவையானது, சமீபத்தில் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் மற்றும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை இணைப்பதற்கு அதன் ஒப்புதலை அளித்தது.
BSNL நிறுவனமானது, அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவாகச் செயல்படுவதோடு அதன் சொத்து உரிமைகள் அரசாங்கத்திடம் இருக்கும்.
பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனமானது பாரத்நெட் என்றும் அழைக்கப் படுகிறது.
இது அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாவதோடு, இது அகலப் பட்டை சேவை தொடர்பான உள்கட்டமைப்பினை வழங்குகிறது.
BSNL நிறுவனமானது, நாட்டின் மிகப்பெரிய, அரசாங்கத்திற்குச் சொந்தமான, கம்பிவட இணைப்பற்ற தொலைத் தொடர்பு சேவை வழங்குநராக உள்ளது.