TNPSC Thervupettagam

Bt கத்தரிக்காய் - சட்டவிரோத சாகுபடி

December 31 , 2019 1794 days 770 0
  • ஹரியானாவில் சட்டவிரோத Bt கத்திரிக்காய் சாகுபடி பயிரிடப் பட்டது  (மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்) சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.
  • இதன் மாதிரிகள் ஹரியானாவின்  மாநில அரசாங்கத்தால் தேசியத் தாவர மரபணு வள ஆய்வகத்திற்கு (National Bureau of Plant Genetic Resources - NBPGR) அனுப்பப் பட்டுள்ளன.
  • சீனாவிற்கு அடுத்தபடியாக கத்தரிக்காய் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்த மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயான Bt வகை கத்திரிக்காய்கள் 2009 ஆம் ஆண்டில் மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவால் (Genetic Engineering Appraisal Committee - GEAC) அங்கீகரிக்கப்பட்டது.
  • ஆனால் இதன் ஒப்புதல் 2010 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் நிராகரிக்கப் பட்டது.
  • GEAC சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒரு சட்டரீதியான அமைப்பாகச் செயல்படுகின்றது.
  • இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட ஒரே பயிர் 2002 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப் பட்ட Bt வகை பருத்தி மட்டுமேயாகும்.
  • தாரா கலப்பினக் கடுகு - 11 அல்லது டிஎம்எச் - 11 என்பது ஒரு மரபணு மாற்றப்பட்ட கடுகு வகை ஆகும். இது தில்லி பல்கலைக் கழகத்தின் பயிர்த் தாவரங்களின் மரபணு கையாளுதலுக்கான மையத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • மத்திய அரசால் இது அங்கீகரிக்கப்பட்டால், இது Bt பருத்திக்குப் பிறகு இரண்டாவது மரபணு மாற்றப்பட்ட பயிராகவும் நாட்டில் சாகுபடிக்கு அனுமதிக்கப்பட்ட முதலாவது மரபணு மாற்றப்பட்ட உணவு வகைப் பயிராகவும் உருவெடுக்க கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்