ஹரியானாவில் சட்டவிரோத Bt கத்திரிக்காய் சாகுபடி பயிரிடப் பட்டது (மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய்) சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.
இதன் மாதிரிகள் ஹரியானாவின் மாநில அரசாங்கத்தால் தேசியத் தாவர மரபணு வள ஆய்வகத்திற்கு (National Bureau of Plant Genetic Resources - NBPGR) அனுப்பப் பட்டுள்ளன.
சீனாவிற்கு அடுத்தபடியாக கத்தரிக்காய் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயான Bt வகை கத்திரிக்காய்கள் 2009 ஆம் ஆண்டில் மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவால் (Genetic Engineering Appraisal Committee - GEAC) அங்கீகரிக்கப்பட்டது.
ஆனால் இதன் ஒப்புதல் 2010 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் நிராகரிக்கப் பட்டது.
GEAC சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் கீழ் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் ஒரு சட்டரீதியான அமைப்பாகச் செயல்படுகின்றது.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட ஒரே பயிர் 2002 ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப் பட்ட Bt வகை பருத்தி மட்டுமேயாகும்.
தாரா கலப்பினக் கடுகு - 11 அல்லது டிஎம்எச் - 11 என்பது ஒரு மரபணு மாற்றப்பட்ட கடுகு வகை ஆகும். இது தில்லி பல்கலைக் கழகத்தின் பயிர்த் தாவரங்களின் மரபணு கையாளுதலுக்கான மையத்தால் உருவாக்கப் பட்டுள்ளது.
மத்திய அரசால் இது அங்கீகரிக்கப்பட்டால், இது Bt பருத்திக்குப் பிறகு இரண்டாவது மரபணு மாற்றப்பட்ட பயிராகவும் நாட்டில் சாகுபடிக்கு அனுமதிக்கப்பட்ட முதலாவது மரபணு மாற்றப்பட்ட உணவு வகைப் பயிராகவும் உருவெடுக்க கூடும்.