TNPSC Thervupettagam

Business Line’s பத்திரிக்கையின் மாற்றத்தை ஏற்படுத்தியவருக்கான விருதுகள் 2019

March 19 , 2019 1960 days 584 0
  • மிகப் பரந்துபட்ட முரண்பாடுகளுக்கு எதிரான துறையில் சாதனைகளை நிகழ்த்திய சமூக தொழில் முனைவோர்களைக் கௌரவிப்பதற்காக Business Line பத்திரிக்கையின் மாற்றத்தை ஏற்படுத்தியவருக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • ஆண்டில் மாற்றத்தை ஏற்படுத்தியவருக்கான விருது
    • சரக்கு மற்றும் சேவைகள் வரி ஆணையம்
    • இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 377-ற்கு எதிராக வழக்கு தொடுத்த மனுதாரர்கள்
  • மாற்றத்தை ஏற்படுத்தியவருக்கான இளையோர் விருது
    • அஞ்சு வெர்மா – பின்தங்கியுள்ள குழந்தைகளின் சமூக நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துவதற்கு கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
    • குஷ் மற்றும் அர்ஜுன் பாண்டோ விருது - கால்பந்து போட்டிகளில் சிறந்து விளங்குபவர்களை அடையாளம் காண்பதற்காக Scoutme என்ற தளத்தை உருவாக்கியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • சமூக மாற்றத்திற்கான விருது
    • கலிங்கா சமூக அறிவியல் நிறுவனம் - மாவோயிஸ்ட் மற்றும் நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் வாழ்பவர்களுக்கு தரமான கல்வியை அளித்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • டிஜிட்டல் மாற்றத்திற்கான விருது
    • மின்னணு முறையிலான தேசிய வேளாண் சந்தை (Enam - (National Agriculture Market)) – விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த வேளாண் பொருட்களை நேரடியாக சந்தையில் விற்பனை செய்வதற்கு விவசாயிகளை அனுமதித்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்