சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் Business4land மன்றம் நடைபெற்றது.
UNCCD அமைப்பின் Business4land- பிசினஸ்4லேண்ட் (B4L) முன்னெடுப்பானது, தனியார் துறை நிறுவனங்கள் நிலச் சீரழிவு குறித்த அபாயங்களை மதிப்பிடச் செய்வதற்கும், அதற்கான தணிப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வழங்குவதற்குமான ஒரு வழி காட்டுதலை வெளியிடுகிறது.
B4L முன்னெடுப்பின் நடவடிக்கை மேற்கொள்வதற்கான அழைப்பு ஆனது, Business4land (B4L) முன்னெடுப்பின் முக்கியப் பிரிவுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் பங்களிக்குமாறு நிறுவனங்களை ஊக்குவிக்கிறது.
44 டிரில்லியன் டாலர் அல்லது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்கு வகிக்கும் பகுதிகள் ஆனது, இயற்கையினால் ஏற்படும் இழப்பின் ஆபத்தில் உள்ளது.