சமீபத்தில் BWF (Badminton World Federation) உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது சீனாவின் குவாங்சோவின் தியன்ஹியில் நடத்தப்பட்டது.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற BWF உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற முதலாவது இந்திய வீராங்கனையாக P.V. சிந்து உருவெடுத்ததன் மூலம் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
இவர் 2017 ஆம் ஆண்டின் உலக சாம்பியனான ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஒகுநாராவை இப்போட்டியில் வீழ்த்தினார். 2018 ஆம் ஆண்டில் P.V. சிந்து பெற்ற முதலாவது பட்டம் இதுவாகும்.
சீனாவைச் சேர்ந்த ஷீ யூகி ஜப்பானைச் சேர்ந்த ஜெண்ட்டோ மொமொடோவை வீழ்த்தி ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.
மற்ற வெற்றியாளர்கள்
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு - லீ ஜூன்கூய் மற்றும் லியூ யூச்சென் (சீனா).
பெண்களுக்கான இரட்டையர் பிரிவு - மிசாகி மட்சுடோமா மற்றும் ஆயாகா தாகாஹாஷீ (ஜப்பான்).
கலப்பு இரட்டையர் பிரிவு - வாங் வொய்லு மற்றும் ஹுவாங் டோங்பிங் (சீனா).