TNPSC Thervupettagam

BWF உலகக் கோப்பைப் போட்டி

December 17 , 2018 2173 days 596 0
  • சமீபத்தில் BWF (Badminton World Federation) உலகக் கோப்பை இறுதிப் போட்டியானது சீனாவின் குவாங்சோவின் தியன்ஹியில் நடத்தப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெற்ற BWF உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற முதலாவது இந்திய வீராங்கனையாக P.V. சிந்து உருவெடுத்ததன் மூலம் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
  • இவர் 2017 ஆம் ஆண்டின் உலக சாம்பியனான ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஒகுநாராவை இப்போட்டியில் வீழ்த்தினார். 2018 ஆம் ஆண்டில் P.V. சிந்து பெற்ற முதலாவது பட்டம் இதுவாகும்.
  • சீனாவைச் சேர்ந்த ஷீ யூகி ஜப்பானைச் சேர்ந்த ஜெண்ட்டோ மொமொடோவை வீழ்த்தி ஆண்களுக்கான ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார்.
மற்ற வெற்றியாளர்கள்
  • ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு - லீ ஜூன்கூய் மற்றும் லியூ யூச்சென் (சீனா).
  • பெண்களுக்கான இரட்டையர் பிரிவு - மிசாகி மட்சுடோமா மற்றும் ஆயாகா தாகாஹாஷீ (ஜப்பான்).
  • கலப்பு இரட்டையர் பிரிவு - வாங் வொய்லு மற்றும் ஹுவாங் டோங்பிங் (சீனா).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்