கர்நாடக மாநிலத்தின் மங்களூருவில் உள்ள பாரதி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் (BDIC – Bharati Defense and Infrastructure Limited) படகுத் துறையில் இந்திய கடலோரக் காவல் படைக்கு BDIC நிறுவனமானது ICG C-162 என்ற அதிவேக இடைமறிப்புப் படகை விநியோகித்துள்ளது.
இந்திய கடலோரக் காவல் படையில் கொள்முதல் செய்யப்பட்ட 15 அதிவேக இடைமறிப்புப் படகுகள் வரிசையில் (Series of 15 High speed Interceptor boats series) C-162 ஆறாவது படகாகும்.
தனித்தனியே 1650 கிலோ வாட் திறனுடைய இரட்டை என்ஜின்களின் உந்துதலால் செயல்படும் இப்படகானது புதிய தலைமுறை அர்னேசன் புறப்பரப்பு ஓட்ட உந்துதல் அமைப்பையும் (Arneson Surface Drive propulsion system) கொண்டுள்ளது.
கடலோர ரோந்துப் பணிக்காக இக்கப்பல் கொச்சி கடலோர காவற் படையில் பயன்படுத்தப்பட உள்ளது.