TNPSC Thervupettagam

C-162 – கடலோர காவல்படை

March 7 , 2018 2328 days 720 0
  • கர்நாடக மாநிலத்தின் மங்களூருவில் உள்ள பாரதி பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் (BDIC – Bharati Defense and Infrastructure Limited) படகுத் துறையில் இந்திய கடலோரக் காவல் படைக்கு BDIC நிறுவனமானது ICG C-162 என்ற அதிவேக இடைமறிப்புப் படகை  விநியோகித்துள்ளது.
  • இந்திய கடலோரக் காவல் படையில் கொள்முதல் செய்யப்பட்ட 15 அதிவேக இடைமறிப்புப் படகுகள் வரிசையில் (Series of 15 High speed Interceptor boats series) C-162 ஆறாவது படகாகும்.
  • தனித்தனியே 1650 கிலோ வாட் திறனுடைய இரட்டை என்ஜின்களின் உந்துதலால் செயல்படும் இப்படகானது புதிய தலைமுறை அர்னேசன் புறப்பரப்பு ஓட்ட உந்துதல் அமைப்பையும்  (Arneson Surface Drive propulsion system) கொண்டுள்ளது.
  • கடலோர ரோந்துப் பணிக்காக இக்கப்பல் கொச்சி கடலோர காவற் படையில் பயன்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்