TNPSC Thervupettagam

C-17- குளோப் மாஸ்டர்

April 7 , 2018 2297 days 693 0
  • இந்திய விமானப் படையானது (Indian Air Force- IAF) முதல் முறையாக C-17 குளோப் மாஸ்டர் எனும் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரியப் போக்குவரத்து விமானத்தை எத்தகு தவறுகளின் நேர்வின்றியும்  (flawlessly)  வெற்றிகரமாக  தரையிறக்கியுள்ளது.

  • இந்திய விமானப் படையானது C-17 குளோப் மாஸ்டர் விமானத்தை சீன எல்லைக்கு மிக அருகாமையில் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள    பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நவீன தரையிறங்கு ஓடுதளத்தில்  (strategic Tuting Advanced Landing Ground -ALG)   தரையிறக்கியுள்ளது.
  • இந்த விமானத்தின் தரையிறக்கமானது பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய எல்லை மாநிலங்களில் (strategically-key border state) இந்திய விமானப்படையின்  ஒட்டுமொத்த பாதுகாப்பு செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கான ஓர் நகர்வாக கருதப்படுகின்றது.

C-17 குளோப் மாஸ்டர்

  • அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டப் போக்குவரத்து விமானமான C-17 குளோப் மாஸ்டர் படைகளை அழைத்துச் செல்லுதல் (transporting troops), மருத்துவ மீட்பு வெளியேற்ற உதவிகள் (medical evacuation), சரக்குகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லுதல், அவசரகால உதவிகள், பாதுகாப்பு முக்கியத்துவ வான்பயண திட்டங்கள் (strategic airlift missions) போன்ற பல்வேறு செயல்களுக்கு பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது.
  • C-17 குளோப் மாஸ்டர் அதிகாரப் பூர்வமாக இந்திய விமானப்படையால் 2013 ஆம் ஆண்டு பணிச் சேவையில் சேர்த்து கொள்ளப்பட்டது.
  • 13,000 மீட்டர் உயரத்தில் வட இந்தியாவில் அமைந்துள்ள இமாலய வான்படைதளங்கள் முதல் தென் இந்தியாவில் அமைந்துள்ள இந்தியப் பெருங்கடல் வான் தளம் (Indian Ocean bases) வரை பல்வேறுபட்ட நிலப் பரப்புகளிலும் இந்த விமானத்தை செயல்படுத்த முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்