TNPSC Thervupettagam

C/2023 A3 (சுச்சின்ஷன்–அட்லஸ்)

October 9 , 2024 45 days 73 0
  • C/2023 A3 (சுச்சின்ஷன்–அட்லஸ்) எனப்படும் ஒரு வால் நட்சத்திரம் ஆனது பெங்களூரு நகரின் வான் வெளியில் கடந்து சென்றது.
  • C/2023 A3 வால் நட்சத்திரம் ஆனது முதன்முதலில் சீனாவின் பர்ப்பிள் மௌண்டைன் ஆய்வகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • C/2023 A3 என்பது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பயணிக்கும் வால் நட்சத்திரம் அல்ல.
  • அதாவது இந்த வால் நட்சத்திரம் ஆனது மீண்டும் எப்போது தோன்றும் என்பது குறித்த காலக்கெடு எதுவும் இல்லை.
  • இந்த வால் நட்சத்திரம் ஆனது சுமார் 80,000 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்தினை மீண்டும் அடைந்துள்ளது.
  • இது பூமியிலிருந்து சுமார் 129.6 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் பயணித்து இருக்கும்.
  • இது செக்ஸ்டன்ஸ் விண்மீன் திரளின் ஒரு பகுதியாகக் கூறப்படுகிறது.
  • ஹாலி வால் நட்சத்திரம் என்பது 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் குறிப்பிட்ட காலஇடைவெளி முறைக்குட்பட்ட ஒரு வால் நட்சத்திரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்