TNPSC Thervupettagam

C-KYC தரவுத் தளம்

May 29 , 2023 421 days 199 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, சமீபத்தில் சில மையப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்கள் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்ளுதல் (C-KYC) தரவுத்தளத்தினை அதிக ஆபத்து மிக்கதாக வகைப்படுத்தியுள்ள நிலையில், இது நிதி நிறுவனங்களுக்கு ஒரு சவாலானச் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த நடவடிக்கையானது, ஒளிப்படக் காட்சி மூலமான KYC அல்லது நேரடி முறை KYC போன்ற வாடிக்கையாளர் அங்கீகாரத்திற்கான மாற்று முறைகள் குறித்து ஒரு ஆய்வு செய்ய வங்கிகளைத் தூண்டியுள்ளது.
  • C-KYC என்பது வாடிக்கையாளரின் அனைத்துத் தனிப்பட்ட விவரங்களையும் சேகரித்து அதனைச் சேமித்து வைக்கும் ஒரு மையப்படுத்தப்பட்ட களஞ்சியமாகும்.
  • இது அனைத்து KYC செயல்முறைகளையும் ஒரே தளத்தில் கொண்டு வர உதவுகிறது.
  • மத்தியக் கையகப்படுத்துதல் மற்றும் சொத்து மறுசீராக்கம் மற்றும் பங்குகள் மீதான வட்டி (CERSAI) பதிவகமானது C-KYC பதிவேட்டினை நிர்வகிக்கிறது.
  • 2012-13 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் C-KYC குறித்து அறிவிக்கப் பட்டு, 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்