- அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, உறுதிபடுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் புலிகள் தரநிலைகள் கூட்டிணைவின் (Conservation Assured | Tiger Standards- CA|TS) ஒரு பகுதியாக உள்ள 13 சதவீத புலிகள் பாதுகாப்புப் பகுதிகள் (tiger conservation areas) மட்டுமே உலக பாதுகாப்புத் தரநிலைகளை (Global conservation standards) அடைந்துள்ளன..
- உறுதிபடுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் புலிகள் தரநிலைகள் கூட்டிணைவின் ஓர் பகுதியாக உள்ள புலிகள் உலவு வரம்புடைய நாடுகள் (Tiger ranges Countries) மற்றும் 11 முன்னணி பாதுகாப்பு அமைப்புகளால் 100-க்கும் மேற்பட்ட புலிகள் பாதுகாப்புப் பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
- கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட பகுதிகளானது தோராயமாக 70 சதவீதம் உலகினுடைய வனப் புலிகளின் இருப்பிடமாகும்.
- குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு புலிகள் பாதுகாப்புப் பகுதிகளானது தங்களினுடைய புலிகளை இழக்கும் மோசமான இடரில் இருப்பதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
- இவ்வகையிலான பெரும்பாலான புலிகள் பாதுகாப்பு பகுதிகளானது தென்கிழக்கு ஆசியாவில் உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.
CA / TS கூட்டிணைவைப் பற்றி
- CA / TS கூட்டிணைவானது அதிகாரப்பூர்வ முறையில் 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது புலிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் நிபுணர்களினால் ஏற்படுத்தப்பட்டது.
- தங்களுடைய மேலாண்மை முறைகள் வெற்றிகரமாக புலிகளின் பாதுகாப்பிற்கு இட்டுச் செல்லுமா என சரிபார்க்க புலிகள் பாதுகாப்புப் பகுதிகளை அனுமதிக்கும் ஓர் தரநிலை வகைப்பாட்டு வரன்முறைகளின் தொகுதியே (Set of criteria) CA / TS கூட்டிணைவாகும்.
- ஏழு தூண்கள் (seven pillars) மற்றும் முக்கிய மேலாண்மை செயல்பாடுகளினுடைய 17 கூறுகளின் (17 elements of critical management activity) கீழ் இத்தரநிலைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
- வனப் புலிகளுக்கு பாதுகாப்பான வாழிடங்களை உறுதி செய்வதே இதன் முக்கியத் திட்ட நோக்கமாகும் (mission).
- இது உலக வன உயிர் நிதியத்தின் (World Wildlife Fund) உலகளாவிய புலிகள் பாதுகாப்பு திட்டமான T × 2 திட்டத்தின் முக்கிய பகுதியாகும்.
- T×2 திட்டத்தின் நோக்கம் 2022 ஆம் ஆண்டில் வனப் புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக்குவதாகும்.