TNPSC Thervupettagam

CA / TS கூட்டிணைவு - புலிகள் கணக்கெடுப்பு

April 8 , 2018 2423 days 811 0
  • அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, உறுதிபடுத்தப்பட்ட பாதுகாப்பு மற்றும் புலிகள் தரநிலைகள் கூட்டிணைவின் (Conservation Assured | Tiger Standards- CA|TS)  ஒரு பகுதியாக உள்ள  13 சதவீத புலிகள் பாதுகாப்புப் பகுதிகள்  (tiger conservation areas)  மட்டுமே உலக பாதுகாப்புத் தரநிலைகளை  (Global conservation  standards) அடைந்துள்ளன..
  • உறுதிபடுத்தப்பட்ட பாதுகாப்பு  மற்றும் புலிகள் தரநிலைகள்  கூட்டிணைவின்   ஓர் பகுதியாக உள்ள புலிகள் உலவு வரம்புடைய நாடுகள் (Tiger ranges Countries)  மற்றும் 11 முன்னணி பாதுகாப்பு அமைப்புகளால் 100-க்கும் மேற்பட்ட புலிகள் பாதுகாப்புப் பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு  மேற்கொள்ளப்பட்டது.
  • கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட பகுதிகளானது தோராயமாக 70 சதவீதம்     உலகினுடைய  வனப் புலிகளின் இருப்பிடமாகும்.
  • குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு புலிகள் பாதுகாப்புப் பகுதிகளானது தங்களினுடைய புலிகளை இழக்கும் மோசமான இடரில் இருப்பதாக கணக்கெடுப்பில்   கண்டறியப்பட்டுள்ளது.
  • இவ்வகையிலான பெரும்பாலான புலிகள் பாதுகாப்பு பகுதிகளானது தென்கிழக்கு ஆசியாவில் உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.

 CA / TS கூட்டிணைவைப் பற்றி   

  • CA / TS  கூட்டிணைவானது அதிகாரப்பூர்வ முறையில் 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது புலிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் நிபுணர்களினால்   ஏற்படுத்தப்பட்டது.
  • தங்களுடைய மேலாண்மை முறைகள் வெற்றிகரமாக புலிகளின் பாதுகாப்பிற்கு இட்டுச் செல்லுமா என சரிபார்க்க புலிகள் பாதுகாப்புப் பகுதிகளை அனுமதிக்கும் ஓர் தரநிலை வகைப்பாட்டு வரன்முறைகளின் தொகுதியே (Set of criteria) CA / TS   கூட்டிணைவாகும்.
  • ஏழு தூண்கள் (seven pillars) மற்றும் முக்கிய மேலாண்மை செயல்பாடுகளினுடைய 17 கூறுகளின் (17 elements of critical management activity) கீழ் இத்தரநிலைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
  • வனப் புலிகளுக்கு பாதுகாப்பான வாழிடங்களை உறுதி செய்வதே இதன் முக்கியத் திட்ட நோக்கமாகும் (mission).
  • இது உலக வன உயிர் நிதியத்தின் (World Wildlife Fund) உலகளாவிய புலிகள் பாதுகாப்பு திட்டமான T × 2 திட்டத்தின் முக்கிய பகுதியாகும்.
  • T×2 திட்டத்தின் நோக்கம் 2022 ஆம் ஆண்டில் வனப் புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக்குவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்