TNPSC Thervupettagam
November 2 , 2023 261 days 219 0
  • மேக தூசிப்படலத் தொடர்பு மற்றும் மழைப்பொழிவுப் பெருக்க பரிசோதனையானது (CAIPEEX கட்டம்-4) சோலாப்பூர் நகரில் நடத்தப்பட்ட ஒரு அறிவியல் ஆய்வாகும்.
  • தீவிர வெப்பச்சலன மேகங்களில் நீர் உறிஞ்சுதலை தூண்டும் காரணிகளின் செயல் திறனை ஆராய்வது மற்றும் மேக விதைப்புத் தொழில்நுட்ப (செயற்கை மழைப் பொழிவு) நெறிமுறையை உருவாக்குவது ஆகியவை இதன் முதன்மை நோக்கமாகும்.
  • பொருத்தமான சூழ்நிலையில் ஒரு பிராந்தியத்தில் மழைப்பொழிவை அதிகரிக்க மேக விதைப்பு ஒரு சிறந்த உத்தி என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • செயற்கைக் காரணிகள் செலுத்தப்படாத மேகங்களை விட அவை செலுத்தப்பட்ட மேகங்கள் அதிக மழைப் பொழிவினை விளைவித்தன.
  • இது 18% அதிக மழைப்பொழிவை உற்பத்தி செய்யவும் மற்றும் நீர்த் தேவைகளை ஓரளவு நிவர்த்தி செய்யவும் உதவும்.
  • மேக விதைப்பிற்கு கால்சியம் குளோரைடு சுடர்கள் பயன்படுத்தப்பட்டது.
  • மேக விதைப்புத் தொழில்நுட்பம் மூலம் நீர் உற்பத்தி செய்வதற்கான தோராயமான செலவு லிட்டருக்கு 18 பைசா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்