பருவநிலை, வானிலை மற்றும் காற்றின் தரத்தை ஆய்வு செய்த CALIPSO ஆய்வுக் கலமானது சமீபத்தில் தனது பணியை நிறைவு செய்தது.
CALIPSO (மேக தூசிப் படல LIDAR மற்றும் அகச்சிவப்பு தட கண்டறிதல் செயற்கைக் கோள் ஆய்வுக் கலம்) கலமானது 10 பில்லியனுக்கும் அதிகமான LIDAR அளவீடுகளை பதிவு செய்துள்ளது.
அதன் 17 வருட காலச் செயல்பாட்டில் ஆயிரக்கணக்கான அறிவியல் அறிக்கைகளை உருவாக்க உதவியது.
நாசா மற்றும் பிரான்சு நாட்டின் CNES அமைப்பு ஆகியவற்றால் CloudSat செயற்கைக் கோளில், மேகச் செயல்பாடு அறிக்கையிடல் ரேடார் அமைப்புடன் சேர்த்து இது விண்ணில் ஏவப்பட்டது.