இந்திய அரசானது தனது கடற்படைச் செயல் திறன்களை மேம்படுத்துவதற்காக என்று ஆஸ்திரேலியாவின் CAMPCOPTER S-100 ஆளில்லா வான்வழி விமானத்தினை வாங்கச் செய்வதற்காக (UAS) ஷீபெல் எனப்படும் ஒரு ஆஸ்திரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த விமானமானது, பல்வேறு தீவிர தட்பவெப்ப நிலைகளில் செயல்படக் கூடியது மற்றும் அதிகத் தாங்குந் திறன் கொண்டது என்பதால் இது இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு ஏற்றதாக அமைகிறது.
இதனை ஏவுவதற்கும் அதனை திரும்பப் பெறுவதற்கும் குறைந்தபட்ச இடம் தேவைப் படும் என்பதால், இது பல்வேறு கடற்படைக் கப்பல்களில் இருந்து அனுப்புவதற்கு மிக ஏற்றதாக அமைகிறது.