TNPSC Thervupettagam

CAR-T புற்றுநோய் சிகிச்சை

July 8 , 2024 11 days 171 0
  • CAR-T சிகிச்சை என்பது "வெவ்வேறு மரபுத்திரி எண்ணிக்கைக் கொண்ட நோய் எதிரணு உற்பத்தி ஊக்கி  ஏற்பி T-செல்" என்பதன் சுருக்கமாகும்.
  • இது நோயாளியின் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக நோயெதிர்ப்புச் செல்களை மறு சீரமைக்கும் ஓர் அதிநவீன சிகிச்சையாகும்.
  • இந்தப் புதுமையான அணுகுமுறையானது, நோயெதிர்ப்பு மண்டலத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்ற ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்களான T-செல்களை ஏற்பதை உள்ளடக்கியது.
  • ஒரு நோயாளியிடமிருந்து T-செல்கள் எடுக்கப்பட்டு, புற்றுநோய் செல்களை நன்கு கண்டறிந்து அவற்றைத் தாக்கும் வகையில் ஆய்வகத்தில் மாற்றியமைக்கும் செயல் முறையாகும்.
  • இந்த மேம்படுத்தப்பட்ட T-செல்கள் பின்னர் பெருக்கப்பட்டு, மீண்டும் நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை புற்றுநோய் செல்களைத் தேடித் தேடி அழிக்கின்றன.
  • சிகிச்சையளிப்பதற்கு மிகவும் கடினமான நிணநீர்க் குழியப் புற்றுநோய்களின் சிகிச்சையில், நோயாளிகள் இதன்மூலம் சிறப்பான முன்னேற்றத்தினை பெற முடியும் என்று பல தரவுகள் காட்டுகின்றன.
  • தற்போது, இந்த ​சிகிச்சையினைப் பெற்ற சில நோயாளிகளுக்கு இது புதிய புற்று நோய்களை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • அரிதாக, நோயாளிகளின் உடலில், புதிய நோயெதிர்ப்பு உயிரணு புற்றுநோய்கள், அதாவது நிணநீர்க் குழியப் புற்றுநோய் அல்லது இரத்தப் புற்றுநோய் போன்ற இரத்த அணு புற்றுநோய் வகைகள் ஏற்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்