இங்கிலாந்து அரசால் நிதியளிக்கப்படும் தேசிய சுகாதார சேவையால் ஒரு முன்னோடியான, புதிய புற்றுநோய் சிகிச்சையைப் பெறும் முதல் நோயாளியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் உருவாகியிருக்கின்றார்.
CAR-T (Chimeric Antigen Receptor) என்பது தனிப்பட்ட முறையிலான புற்றுநோய் சிகிச்சையாகும்.
இது நோய் எதிர்ப்பு செல்களை நீக்குவதில் ஈடுபட்டு அவைகளை ஆய்வகத்தில் மாற்றுவதன் மூலம் அவை புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு கொள்ளச் செய்வதில் ஈடுபடுகின்றது.
நோய் எதிர்ப்புச் சிகிச்சை என்பது ஒருவரது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு முறையையேப் பயன்படுத்தி அவரதுப் புற்றுநோயை ஒழிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை சிகிச்சை முறையாகும்.
இச்சிகிச்சையின் முதல் நிலையில் நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்தமும் வெள்ளை ரத்த உயிரணுக்களும் பிரிக்கப்படும். மீதமுள்ள ரத்தம் நோயாளிக்கு திருப்பிச் செலுத்தப்படும்.
அதன்பின் ஒரு சிறப்பு வகை நோயெதிர்ப்பு செல்லான T வகை செல்கள் மரபணுவிற்குள் செலுத்தப்பட தீங்கற்ற ஒரு வைரஸ் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த மரபணுக்கள் ஆதாரமற்ற ஆன்டிஜென்களை ஏற்றுக் கொள்ளும் பொருள் என்றழைக்கப்படும் T-செல்களை தங்களது மேற்பரப்பின் மேல் ஒரு கொக்கியை ஏற்படுத்த தூண்டுகின்றது.
நோயாளியின் புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கத் திட்டமிடுவதற்காக இந்த வடிவமைக்கப்பட்ட CAR-T செல்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் பொருத்தப்பட்டுப் பின் திரும்பவும் அவை நோயாளிக்கு உள்ளே செலுத்தப்படுகின்றன.