CAR-T சிகிச்சை என்பது "வெவ்வேறு மரபுத்திரி எண்ணிக்கைக் கொண்டநோய் எதிரணு உற்பத்தி ஊக்கி ஏற்பி T-செல்" என்பதன் சுருக்கமாகும்.
இது நோயாளியின் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக நோயெதிர்ப்புச் செல்களை மறு சீரமைக்கும் ஓர் அதிநவீன சிகிச்சையாகும்.
இந்தப் புதுமையான அணுகுமுறையானது, நோயெதிர்ப்பு மண்டலத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்ற ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்களான T-செல்களை ஏற்பதை உள்ளடக்கியது.
ஒரு நோயாளியிடமிருந்து T-செல்கள் எடுக்கப்பட்டு, புற்றுநோய் செல்களை நன்கு கண்டறிந்து அவற்றைத் தாக்கும் வகையில் ஆய்வகத்தில் மாற்றியமைக்கும் செயல் முறையாகும்.
இந்த மேம்படுத்தப்பட்ட T-செல்கள் பின்னர் பெருக்கப்பட்டு, மீண்டும் நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை புற்றுநோய் செல்களைத் தேடித் தேடி அழிக்கின்றன.
சிகிச்சையளிப்பதற்கு மிகவும் கடினமான நிணநீர்க் குழியப் புற்றுநோய்களின் சிகிச்சையில், நோயாளிகள் இதன்மூலம் சிறப்பான முன்னேற்றத்தினை பெற முடியும் என்று பல தரவுகள் காட்டுகின்றன.
தற்போது, இந்த சிகிச்சையினைப் பெற்ற சில நோயாளிகளுக்கு இது புதிய புற்று நோய்களை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அரிதாக, நோயாளிகளின் உடலில், புதிய நோயெதிர்ப்பு உயிரணு புற்றுநோய்கள், அதாவது நிணநீர்க் குழியப் புற்றுநோய் அல்லது இரத்தப் புற்றுநோய் போன்ற இரத்த அணு புற்றுநோய் வகைகள் ஏற்பட்டுள்ளன.