TNPSC Thervupettagam
June 12 , 2021 1172 days 674 0
  • சைமரிக் ஆன்டிஜன் ஏற்பு – T செல் சிகிச்சைக்கான மருத்துவச் சோதனைகளானது  உலகளவில் மேற்கொள்ளப்பட்டது.
  • இது இறுதிகட்ட நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு, குறிப்பாக தீவிரமான நிண நீர்க் குழியப் புற்றுநோய் (Acute Lymphocytic Leukemia) உள்ள நோயாளிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் மிகுந்த பலன்களை அளித்துள்ளது.
  • முதலாவது CAR – T செல் சிகிச்சை முறையானது மும்பையின் இந்தியத் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் கேன்சர் கேர் எனும் அமைப்பு ஆகியவற்றால் மேற்கொள்ளப் பட்டது.
  • இது மும்பையிலுள்ள டாடா நினைவு மையத்தின் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவால்  மேற்கொள்ளப்பட்டது.
  • CAR – T செல் சிகிச்சை முறையானது மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தினுடைய உயிரி அறிவியல் மற்றும் உயிரிப் பொறியியல் துறையினால் வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டது.
  • இதற்கு BIRAC – PACE என்ற திட்டத்தின் கீழ் உதவி வழங்கப் பட்டுள்ளது.
  • தற்போது இவர்களுடைய CAR-T சிசிச்சை முறையானது தேசிய உயிரி மருந்துத் திட்டத்தின் கீழ் முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்