TNPSC Thervupettagam

IORA அமைச்சர்கள் கூட்டம்

November 17 , 2019 1742 days 575 0
  • அபுதாபியில் நடைபெற்ற இந்தியக் கடலோர நாடுகள் கூட்டமைப்பின் (Indian Ocean Rim Association - IORA) 19வது கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான வி.முரளிதரன் கலந்து கொண்டார்.
  • இந்தக் கூட்டத்தின் கருத்துரு, "இந்தியப் பெருங்கடலில் செழிப்புக்கான பாதையையும் பகிரப்பட்ட நோக்கத்தினையும் ஊக்குவித்தல்" என்பதாகும்.
  • இந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஐக்கிய அரபு அமீரகமானது தென்னாப்பிரிக்காவிடமிருந்து IORAன் தலைவர் பொறுப்பினை ஏற்க இருக்கின்றது. இது இரண்டு ஆண்டு காலத்திற்கு, அதாவது 2021 ஆம் ஆண்டு வரை அந்த அமைப்பின் தலைவராகப் பணியாற்ற இருக்கின்றது.

IORA பற்றி

  • IORA என்பது இந்தியப் பெருங்கடலின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள 22 கடலோர நாடுகளை உள்ளடக்கிய ஒரு சர்வதேச அமைப்பாகும்.
  • இந்த அமைப்பானது முதன்முதலில் 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்  மொரீஷியஸில் இந்தியக் கடலோர நாடுகளின் முன்னெடுப்பாக நிறுவப்பட்டது. பின்னர்  இது 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முறையாகத் தொடங்கப்பட்டது.
  • தலைமையகம்: மொரீஷியஸ்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்