ரோம் நகரில் நடைபெற்ற உயிரியல் பன்முகத் தன்மை உடன்படிக்கை (CBD) மீதான COP16 மாநாடானது, உலகளாவிய அளவில் வளங்காப்பு இலக்குகளுக்கு நிதியளிப்பது தொடர்பான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தினை எட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் கொலம்பியா நாட்டின் காலி நகரில் இடைநிறுத்தப்பட்ட மாநாடு ஆனது, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரோம் நகரில் மீண்டும் தொடங்கியது.
இந்த ஒப்பந்தம் ஆனது, CBD உடன்படிக்கையின் கீழ் நீண்டகால நிதி வழிமுறைகளை நிறுவுகிறது.
இதில் தற்போதுள்ள நிதி ஆதாரங்களை மேம்படுத்துதல் மற்றும் தனியார் துறைப் பங்களிப்புகள் மற்றும் கலப்பு நிதி போன்ற சில புதிய நிதி வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவை அடங்கும்.
2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் சுமார் 200 பில்லியன் டாலர் நிதி திரட்ட என்று அரசாங்கங்கள் உறுதியளித்துள்ளன.
இது 2025 ஆம் ஆண்டிற்குள் ஆண்டிற்கு சுமார் 20 பில்லியன் டாலர் உட்பட, 2030 ஆம் ஆண்டிற்குள் சர்வதேச நிதி ஆதாரங்களில் இருந்து ஆண்டிற்கு 30 பில்லியன் டாலராக நிதி திரட்டுவதும் அடங்கும்.
உலகளாவியச் சுற்றுச்சூழல் வசதி (GEF) ஆனது தனியார் துறையிலிருந்து 1.9 பில்லியன் டாலர் உட்பட கூடுதலாக சுமார் 22 பில்லியன் டாலர் நிதியுடன், ஏற்கனவே பல்லுயிர்ப் பெருக்க இலக்குகளை ஆதரிப்பதற்காக என 3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது.
COP17 ஆனது 2026 ஆம் ஆண்டில் ஆர்மேனியாவில் நடைபெற உள்ளது.