மத்திய மின் ஆளுகைப் பிரிவுடன் (e-Governance) இணைந்து மத்திய உயர்கல்வி வாரியமானது (Central Board of Secondary Education -CBSE) ‘பரிணம் மஞ்சுஷா’ (Parinam Manjusha) என்ற டிஜிட்டல் கல்விக் களஞ்சியத்தை உருவாக்கியுள்ளது.
இது அண்மையில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்த அல்லது கல்வி ஆவணங்களை இழந்தவர்களுக்கு டிஜிட்டல் முறையில் மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ்கள் மற்றும் வெற்றி பெற்ற சான்றிதழ்கள் ஆகியவற்றை CBSE உடன் இணைந்த கேரள பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் டிஜிட்டல் களஞ்சியமாக செயல்படுகிறது.
இந்தக் கல்விக் களஞ்சியமானது டிஜிலாக்கருடன் ஒருங்கிணைக்கப்பட்டது.
மாணவர்கள் https://digitallocker.gov.in மற்றும் https://digitallocker.gov.in ஆகிய தளங்களுக்குச் சென்று பயனர் பெயர் / கடவுச் சொல்லைப் பயன்படுத்தி தங்களது கல்வி ஆவணங்களைப் பதிவிறக்கலாம்.
இந்த டிஜிட்டல் கல்வி ஆவணங்கள் சி.பி.எஸ்.இ தேர்வுக் கட்டுப்பாட்டாளரால் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்படுகின்றன. இவை தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும்.
இந்த ஆவணங்கள் QR குறியீடுகளை கொண்டிருக்கும். எனவே டிஜிலாக்கர் (DigiLocker) செயலியைப் பயன்படுத்தி ஆவணங்களின் நம்பகத் தன்மையை சரிபார்க்க இயலும்.