August 8 , 2024
110 days
131
- CCPWC என்பது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய வெளி சார் குற்றங்கள் தடுப்பு என்பதனைக் குறிக்கிறது.
- நிர்பயா நிதியத்தின் கீழ் தொடங்கப்பட்ட CCPWC முன்னெடுப்பு ஆனது, இணைய வெளி சார் குற்றங்களைக் கையாள்வதில் கவனம் செலுத்துகிறது.
- இந்த முன்னெடுப்பின் முக்கியப் பகுதியானது, தேசிய இணைய வெளி சார்ந்தக் குற்றங்களின் அறிக்கையிடல் தளம் (NCRP) ஆகும்.
- இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- இயங்கலையில் மேற்கொள்ளப்படும் இணைய வெளி சார் குற்றங்கள் குறித்த அறிக்கையிடல் தளம்
- தேசிய அளவிலான இணைய வெளி சார் குற்றங்கள் குறித்த தடயவியல் ஆய்வகம்
- காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களுக்கானப் பயிற்சி
- இணைய வெளி சார் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள்
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு.
Post Views:
131