CCTNS தொடங்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் உள்ள சுமார் 17,130 அனைத்து காவல் நிலையங்களும் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு வலையமைப்பு மற்றும் அமைப்புகளில் (CCTNS) இணைக்கப்பட்டுள்ளன.
CCTNS என்பது முதல் தகவல் அறிக்கைகள் (FIRs), குற்றப் பத்திரிகைகள் மற்றும் விசாரணை அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான ஒரு மையப்படுத்தப்பட்ட இயங்கலைத் தளமாகும்.
நாடு முழுவதும் உள்ள சட்ட அமலாக்க அதிகாரிகளால் இந்த இயங்கலைத் தரவுத் தளத்தை அணுக முடியும்.
இது 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.