CDP அமைப்பின் சிறந்த பருவநிலை நடவடிக்கைப் பட்டியல்
November 29 , 2022 732 days 420 0
CDP அமைப்பு வெளியிட்ட 5வது வருடாந்திர நகரங்கள் அறிக்கையில் A-பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் இந்திய நகரமாக மும்பை மாறியுள்ளது.
சவால்கள் நிறைந்த உலகப் பொருளாதாரச் சூழ்நிலையிலும் மும்பை நகரினால் இந்த நிலையினை எட்ட முடிந்தது.
மும்பை நகரமானது, 'பருவநிலை நெகிழ்திறன் கொண்ட மும்பையை நோக்கி' எனப் படும் தனது முதலாவது பருவநிலைச் செயல் திட்டத்தை (2022) வெளியிட்டது.
2050 ஆம் ஆண்டிற்குள் நிகர-சுழியம் என்ற கார்பன் உமிழ்வு நடுநிலைமையை அடையச் செய்வதற்கான நோக்கங்களை இது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
உலகெங்கிலும் உள்ள 122 நகரங்கள், 2022 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் நடவடிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையில் முன்னணியில் இருப்பதாக CDP அமைப்பினால் குறிப்பிடப் பட்டுள்ளது.
முதன்முறையாக, மும்பை உட்பட உலகின் தெற்குப் பகுதியில் உள்ள பல நாடுகளின் நகரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
80 சதவீத நகரங்கள் வறட்சி முதல் வெள்ளம் வரையிலான பல்வேறு பருவநிலை இடர்களை எதிர்கொள்வதாக சமீபத்திய CDP தரவு குறிப்பிடுகிறது.
இவை 2025 ஆம் ஆண்டில், 25 சதவீத நகரங்களுக்கு மிகவும் தீவிரமானதாகவும் அடிக்கடி ஏற்படக் கூடியதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.