மத்திய அரசானது தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக புதிய இணைய தளத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த இணைய தளம் CDP-SURAKSHA என அறியப்படுகிறது.
SURAKSHA என்பது "ஒருங்கிணைந்த வள ஒதுக்கீடு, தகவல் மற்றும் பாதுகாப்பான தோட்டக் கலை உதவி ஆகியவற்றிற்கான அமைப்பு" என்பதைக் குறிக்கிறது.
இந்தியத் தேசியக் கொடுப்பனவு கழகத்தின் (NPCI) e-RUPI பற்றுச் சீட்டினைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் மானியங்களை உடனடியாக வழங்க இந்த தளம் வழி வகுக்கும்.
CDP என்பது தேசியத் தோட்டக்கலை வாரியம் சார்ந்த மத்திய அரசின் திட்டத்தின் ஓர் அங்கமாகும்.
இதுவரையில் 55 தோட்டக்கலை தொகுப்புகள் (பகுதிகள்) கண்டறியப்பட்டு, அதில் சோதனை முறையில் மானியம் வழங்கப்படுவதற்காக 12 பகுதிகள் தேர்வு செய்யப் பட்டு ள்ளன.
மேற்கு வங்காளத்தில் ஒரு மலர் வளர்ப்பு தோட்டங்கள், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தேங்காய் தோட்டங்கள் மற்றும் குஜராத்தில் வெள்ளை வெங்காயத் தோட்டங்கள் ஆகியவற்றிற்கு அடுத்தடுத்து என்ற நிலையில் மேலும் நான்கு தொகுப்புகளுக்கு இனி மானியங்கள் வழங்கப்பட உள்ளன.