TNPSC Thervupettagam
June 2 , 2018 2270 days 673 0
  • CEAT கிரிக்கெட் மதிப்பீட்டு விருதுகளில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதை வென்றுள்ளார்.
  • சர்வதேச மட்டை வீச்சு வீரராக இந்த ஆண்டிற்கான விருதை இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும், சர்வதேச பந்து வீச்சாளருக்கான இந்த ஆண்டிற்கான விருதை நியூசிலாந்து அணியின் வேகப்பந்து புகழ் டிரெண்ட் பவுல்ட்டும் வென்றுள்ளனர்.
  • இந்த ஆண்டிற்கான டி 20 பந்து வீச்சாளருக்கான விருது ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான மிகச் சிறந்த ஆட்டத்திற்கான விருது இந்திய வீரரான ஹர்மன்பிரீத் கவுருக்கு வழங்கப்பட்டது.
  • இந்த ஆண்டில் உள்நாட்டிற்கான சிறந்த வீரர் விருது மயங்க் அகர்வாலிற்கு வழங்கப்பட்டது.
  • பிரபலங்களின் தேர்வு என்ற விருதிற்கு மேற்கு இந்திய அணியின் மட்டை வீச்சாளர் கிறிஸ் கெயிலிற்கு வழங்கப்பட்டது.
  • வாழ்நாள் சாதனையாளர் விருது முன்னாள் இந்திய அணி விக்கெட் கீப்பர் பரோக் இன்ஜினியருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்