TNPSC Thervupettagam
August 24 , 2018 2157 days 1023 0
  • இந்திய கணினி அவசரகால மீட்பு நிறுவனத்தின் (Indian Computer Emergency Response Team) சமீபத்திய அறிக்கையின் படி இந்திய அலுவலக இணைய தளங்களில் அதிகப்படியான இணைய தாக்குதல்கள் சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் இருந்து நடத்தப்படுகின்றன.
  • மொத்த இணைய தாக்குதல்களில் சீனாவானது 35% என்ற மிகப்பெரிய அளவில் இந்திய அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா (17%), ரஷ்யா (15%), பாகிஸ்தான் (9%), கனடா (7%) ஆகியன உள்ளன.
  • இந்த அறிக்கையானது தேசிய பாதுகாப்பு சபையின் செயலகத்திற்கும் (National Security Council Secretariat) பிற பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
  • CERT-In ஆனது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தகவல் தொழில்நுட்ப (இணையம்) பாதுகாப்பிற்கான முதன்மை நிறுவனமாகும்.
  • 2004ல் நிறுவப்பட்ட இது அழிவு மற்றும் ஊடுருவு நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் இணையவெளி மற்றும் மென்பொருள் உட்கட்டமைப்பைப் பாதுகாக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்