TNPSC Thervupettagam

CERT- தகவல் அறியும் உரிமைச் சட்டம்

December 9 , 2023 225 days 138 0
  • பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT), 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பில் இருந்து இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலெதிர்ப்புக் குழுவிற்கு (CERT-In) விலக்கு அளிக்கும் அறிவிப்பைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
  • இனி 2005 ஆம் ஆண்டின் RTI சட்டத்தின் எல்லைக்கு வெளியே செயல்படும் CERT-In அமைப்பானது அதன் செயல்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய முக்கியத தகவல்களுக்கான பொதுமக்களின் அணுகலைக் கட்டுப்படுத்துகிறது.
  • இருப்பினும், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களுக்கு அந்த துணைப் பிரிவு பொருந்தாது.
  • புலனாய்வுப் பணியகம், வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம், அமலாக்கத் துறை இயக்குநரகம், போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் பிற முக்கிய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.
  • CERT-In என்பது அச்சுறுத்தல் (ஹேக்கிங்) மற்றும் சட்ட விரோதப் பயன்பாடு (ஃபிஷிங்) போன்ற இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கான தேசிய அளவிலான முதன்மை நிறுவனம் ஆகும்.
  • இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்