உணவு மற்றும் வேளாண்மைக்கான மரபணு வளங்கள் ஆணையத்தின் (CGRFA-20) 20வது கூட்டம் ஆனது ரோம் நகரில் நடைபெற்றது.
உணவு மற்றும் வேளாண்மைக்கான உலகின் தாவர மரபணு வளங்களின் நிலைமை குறித்த மூன்றாவது அறிக்கையும், உலகின் வன மரபணு வளங்களின் நிலை குறித்த இரண்டாவது அறிக்கையும் இந்த நிகழ்வின் போது வெளியிடப் பட்டன.
தாவர மரபணு வளங்கள் மீதான அறிக்கையானது உலகளாவியப் போக்குகள், வளங் காப்பு முயற்சிகள் மற்றும் பயிர்ப் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதில் உள்ள பல சவால்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
உலகின் வன மரபணு வளங்கள் ஆனது, உலகளவில் வனப் பல்லுயிர்ப் பெருக்கத்தின் நிலையை மதிப்பிடுகின்றன.
இது நிலையான ஒரு வன மேலாண்மை மற்றும் பருவநிலைத் தகவமைப்பில் மரபணு பன்முகத் தன்மையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.