சந்திராவின் மேற்பரப்பு வெப்பஇயற்பியல் பரிசோதனை (ChaSTE) என்பது சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் உள்ள சில பகுதிகளில் இடம் சார்ந்த வெப்பநிலையை அளவிடுவதற்கான முதல் கருவியாக மாறியுள்ளது.
இதன் முந்தைய இரண்டு ஏவுதல்கள் தோல்வியடைந்த பிறகு, விண்வெளியில் வெப்ப ஆய்வுக் கருவியினை நிலை நிறுத்துவதற்காக வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட முதல் திட்டம் இதுவாகும்.
2014 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதியன்று, ஐரோப்பிய விண்வெளி முகமையின் ரொசெட்டா என்ற விண்கலத்துடன் இணைக்கப்பட்ட ஃபிலே எனும் தரையிறங்கு கலம் ஆனது, 67P/சுர்யுமோவ்-ஜெராசிமென்கோ எனும் ஒரு வால் நட்சத்திரத்தின் மீது தரை இறங்கியது.
வெப்பநிலையை அளவிடுவதற்கான கருவிகளைக் கொண்டிருந்த இந்தக் கலத்தினை, மோசமான தரையிறக்கச் சூழல் காரணமாக முறையாக பயன்படுத்த முடியவில்லை.