TNPSC Thervupettagam
March 23 , 2023 486 days 299 0
  • மைக்ரோசாப்ட் கார்ப்பரேசன் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற புத்தொழில் நிறுவனமான OpenAI ஆனது GPT-4 என்ற உரையாடு மென்பொருளினை வெளியிடத் தொடங்கியது.
  • இது மிகவும் பிரபலமாக உள்ள ChatGPT தொழில்நுட்பத்தின் அம்சத்தினையே விஞ்சுகிற வகையிலான, ஒரு சக்தி வாய்ந்த செயற்கை நுண்ணறிவு மாதிரியாகும்.
  • GPT-4 என்பது புகைப்படம் மற்றும் உரை வடிவம் ஆகிய இரண்டு வகையிலான உள்ளீடுகளையும் பயன்படுத்தி உள்ளடக்கத்தினை உருவாக்கக் கூடிய "பல்மாதிரி" தொழில்நுட்பம் ஆகும்.
  • GPT-3.5 உரை வடிவ உள்ளீடுகளை மட்டுமே பயன்படுத்தக் கூடிய அதேசமயம் இந்த சமீபத்திய மாபெரும் மொழி மாதிரியானது, ஒரு புகைப்படத்தில் உள்ள உள்ளடக்கங்களை அடையாளம் கண்டு, அவற்றைப் பகுப்பாய்வு செய்யும் வகையில் படங்களையும் உள்ளீடுகளாகப் பயன்படுத்தக் கூடியதாகும்.
  • GPT-3.5யின் உள்ளடக்கத்தில் சுமார் 3,000 சொற்கள் என்ற வரையறை உள்ளது.
  • இந்தப் புதிய GPT-4 ஆனது 25,000 சொற்களுக்கு மேல் கொண்ட பதில்களை உருவாக்கக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்