இத்தாலியின் அரசாங்கமானது மூன்றாவது குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்களுக்கு இலவச பண்ணை நிலத்தை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.
2019 முதல் 2021 வரை மூன்றாவது குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர்களுக்கு அரசாங்க விவசாய நிலத்தை 20 ஆண்டுகளுக்கு வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புதிய திட்டமானது நாட்டில் குறைந்துள்ள பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த சலுகையில் ஆர்வமுள்ள வெளிநாட்டவர்கள் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகளுக்கு இத்தாலியில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.