TNPSC Thervupettagam

CHIME தொலைநோக்கி தகவல்கள்

June 17 , 2021 1167 days 545 0
  • அறிவியலாளர்கள் CHIME தொலைநோக்கியைக் கொண்டு தொலைநோக்கியின் முதலாவது அதிவேக ரேடியோ வெடிப்புப் பிரிவில் மிகப்பெரிய FRB (Fast Radio Burst – FRB) என்ற ஒரு திரளினைத்  திரட்டியுள்ளனர்.
  • CHIME என்பது கனடா நாட்டின் ஹைட்ரஜன் செறிவு வரைபடமிடல் சார்ந்த ஒரு சோதனையாகும் (Canadian Hydrogen Intensity Mapping Experiment – CHIME).  
  • இது கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா எனுமிடத்தில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய நிலையான ரேடியோ தொலைநோக்கியாகும்.
  • FRB நிகழ்வு தென்படுவது என்பது ரேடியோ வானவியல் துறையில் ஓர் அரிதான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
  • 2007 ஆம் ஆண்டில், முதல் FRB ஏற்பட்டதிலிருந்து இன்று வரையில் ரேடியோ வானவியலாளர்கள் தங்களது தொலைநோக்கிகளின் வாயிலாக சுமார் 140 வெடிப்புகளை மட்டுமே கண்டுள்ளனர்.
  • FRB என்பது சில மில்லி விநாடிகளுக்கு மட்டுமே ஒளிர்ந்து தடயமேயின்றி மறையும் ஒரு பிரகாசமான ஒளிக்கற்றையாகும்.
  • இவை மின்காந்த நிறமாலையின் ரேடியோ கற்றையில் (radio band of the electromagnetic spectrum) பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்