TNPSC Thervupettagam

CHNV நன்னம்பிக்கை உறுதித் திட்டங்கள் – அமெரிக்கா

March 28 , 2025 5 days 32 0
  • சில குறிப்பிட்ட நாடுகளின் "சட்டப்பூர்வப் பாதைகளை" பயன்படுத்தி அமெரிக்க நாட்டிற்குள் புலம்பெயர்ந்தவர்களை அனுமதிக்கச் செய்யும் பிடன் ஆட்சி காலத்தின் திட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இது கியூபா, ஹைத்தி, நிகரகுவா மற்றும் வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்த 532,000 புலம்பெயர்ந்தோரின் தற்காலிக சட்டப் பூர்வ அந்தஸ்தினை ரத்து செய்ய உள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் பணி அனுமதிகள் மற்றும் நாடு கடத்தலில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்ட அதன் நன்னம்பிக்கை உறுதிக் காலம் ஆனது ஏப்ரல் 24 ஆம் தேதியன்று காலாவதியாக உள்ளது.
  • குடிவரவு மற்றும் தேசியச் சட்டத்தின் கீழான நன்னம்பிக்கை உறுதி ஆனது, DHS மேற் பார்வையின் கீழ் ஒரு நபருக்கு அமெரிக்காவில் நுழைந்து அங்கு தற்காலிகமாக என தங்குவதற்கான அனுமதியை அதிகாரப் பூர்வமாக வழங்குகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், அதிபர் ஜோ பிடன் வெனிசுலா மக்களுக்கான நன்னம்பிக்கை உறுதி நுழைவுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தினார் என்பதோடு அதனை 2023 ஆம் ஆண்டில் கியூபா, ஹைத்தி மற்றும் நிகரகுவா போன்ற நாடுகளுக்கு அவர் அதனை விரிவுபடுத்தினார்.
  • இந்த நான்கு நாடுகளுடன் அமெரிக்கா எவ்வித அரசு முறை உறவுகளையும் கொண்டு இருக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்