TNPSC Thervupettagam
June 16 , 2019 1895 days 622 0
  • தஜிகிஸ்தானின் துசான்பேயில் நடைபெற்ற ஆசியாவிற்கான கலந்துரையாடல் மற்றும் நம்பிக்கைக் கட்டமைப்பு நடவடிக்கைகள் (CICA - Conference on Interaction and Confidence Building Measures in Asia) என்ற கருத்தரங்கின் 5-வது பதிப்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, “பாதுகாப்பான மற்றும் மிக வளமான CICA பிராந்தியத்திற்கான ஒரு பங்கிடப்பட்ட தொலைநோக்குப் பார்வை” என்பதாகும்.
CICA
  • CICA என்பது ஆசியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைப்புத் தன்மை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பல நாடுகள் கொண்ட ஒரு மன்றமாகும்.
  • குறைந்த பட்சம் எந்த ஒரு நாடும் அதன் ஒரு பகுதியை ஆசியாவில் கொண்டிருந்தால் CICA-ல் உறுப்பினர் நாடாக ஆவதற்கு அது தகுதியுடையதாகும். இது 1999 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைமையகம் கஜகஸ்தானின் நூர் சுல்தானில் உள்ளது.
  • இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டதிலிருந்து இந்தியா இதில் உறுப்பு நாடாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்