TNPSC Thervupettagam

CICTயின் முதலாவது நிரந்தர இயக்குநர்

June 5 , 2020 1692 days 733 0
  • R. சந்திரசேகரன் சென்னையில் உள்ள மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் (CICT - Central Institute of Classical Tamil) முதலாவது நிரந்தர இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • CICT என்பது 2006 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனிச்சுதந்திர உயர் ஆராய்ச்சி நிறுவனமாகும்.
  • இது முன்னதாக செம்மொழித் தமிழுக்கான சிறப்புமிகு மையம் (CECT - Centre of Excellence for Classical Tamil) என்றறியப் பட்டது.
  • இது மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய மையத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
  • 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில், CECT ஆனது சென்னைக்கு மாற்றப்பட்டு, CICT என அதற்குப் பெயர் மாற்றப்பட்டது.
  • குறள் பீடம் விருது என்ற ஒரு விருதினை வழங்கும் நிறுவனம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்