R. சந்திரசேகரன் சென்னையில் உள்ள மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் (CICT - Central Institute of Classical Tamil) முதலாவது நிரந்தர இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார்.
CICT என்பது 2006 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனிச்சுதந்திர உயர் ஆராய்ச்சி நிறுவனமாகும்.
இது முன்னதாக செம்மொழித் தமிழுக்கான சிறப்புமிகு மையம் (CECT - Centre of Excellence for Classical Tamil) என்றறியப் பட்டது.
இது மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மத்திய மையத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
2008 ஆம் ஆண்டு மே மாதத்தில், CECT ஆனது சென்னைக்கு மாற்றப்பட்டு, CICT என அதற்குப் பெயர் மாற்றப்பட்டது.
குறள் பீடம் விருது என்ற ஒரு விருதினை வழங்கும் நிறுவனம் இதுவாகும்.