TNPSC Thervupettagam
April 5 , 2021 1240 days 690 0
  • சூரியனின் உள் ஒளிவட்டப் பகுதியிலிருந்து ஒளிவட்டப் பொருள் வெளியேற்றத்தினை (Coronal Mass Ejection – CMEs) அடையாளம் காணுவதற்கான (CIISCO) வழிமுறைகள் (Algorithms) இந்தியாவால் சூரியனுக்கு அனுப்பப்படும் முதல் விண்கலமான ‘ஆதித்யா L1என்ற விண்கலத்தில் (CIISCO – Coronal Mass Ejections Identification in Inner Solar Corona) பயன்படுத்தப் படும்.
  • CIISCO ஆனது ஆரியபட்டா கண்காணிப்பு அறிவியல் ஆராய்ச்சி மையம் (ARIES) மற்றும் பெல்ஜியத்தின் ராயல் ஆய்வகம் ஆகியவற்றால் உருவாக்கப் பட்டது.
  • இந்தப் புதிய வழிமுறைகள் சூரியனின் கீழ்மட்ட ஒளிவட்ட (கொரோனா) பகுதியில் அதிவேகமாக நடைபெறும் ஒளிவட்டப் பொருள் வெளியேற்றத்தைக் கண்டறியவும் அதனைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படும்.

ஒளிவட்ட (கொரோனா) பொருள் வெளியேற்றம் (CME)

  • இது சூரியனிலிருந்து வெளிவரும் காந்தப்புலக் கோடுகளால் திரிக்கப்பட்ட பெரிய வாயுக் குமிழ்கள் ஆகும்.
  • இவை விண்வெளியில் பல்வேறு இடையூறுகளையும் புவிகாந்தப் புயல்கள், செயற்கைக் கோள் செயலிழப்பு மற்றும் மின்தடை போன்றவற்றையும் ஏற்படுத்தச் செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்