TNPSC Thervupettagam
June 25 , 2020 1618 days 607 0
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமானது கோவிட் – 19 நோய்த் தொற்றிற்கு வரையறுக்கப்பட்ட அவசர காலப் பயன்பாட்டிற்கு மட்டுமே வேண்டி ரெம்டெசிவிர்மருந்தைக் குறிப்பிட்டுள்ளது.
  • ரெம்டெசிவிர்என்ற இந்த வைரஸ் எதிர்ப்பு மருந்தின் உற்பத்தி மற்றும் சந்தையிடல் ஆகியவற்றிற்காக ஹெட்டிரோ மற்றும் சிப்லா ஆகிய மருந்து நிறுவனங்களுக்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பினால் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
  • கோவிப்போர்என்ற விளம்பரப் பெயரின் கீழ், ஹைதராபாத்தில் உள்ள ஹெட்டிரோ மருந்து நிறுவனத்தின் ரெம்டெசிவிர் மருந்தின் ஒரு பொதுப் பதிப்பானது (காப்புரிமை அல்லாதது) இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட இருக்கின்றது.
  • ஜில்லெட் சயின்ஸ்என்ற அமெரிக்காவில் உள்ள உயிரி மருந்து நிறுவனமானது இந்த மருந்தின் உற்பத்தியாளராகும்.
  • சிப்லா ஆனது “CIPREMI” என்ற பொது மருந்துப் பெயரின் கீழ் இந்த மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்தல் மற்றும் சந்தைப்படுத்தலுக்காக வேண்டி ஜில்லெட் அறிவியல் நிறுவனத்தினால் ஒரு தன்னார்வப் பிரத்தியேக ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
  • கோவிப்போர் என்பது கிளென்மார்க்கின் பேபிப்ளுவிற்குப் பிறகு இந்தியச் சந்தையில் நுழையும் இது போன்ற இரண்டாவது மருந்தாகும்.
  • கோவிட் – 19 நோய்த் தொற்றுச் சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்திற்கு ஒப்புதல் அளித்த முதலாவது நாடு ஜப்பான் ஆகும்.
  • ஐக்கிய இராஜ்ஜியம், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே இந்த மருந்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்