மார்ச் 10 அன்று நாடு முழுவதும் மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையின் (Central Industrial Security Force -CISF) 49-வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது.
புதுதில்லியில் தன்னுடைய தலைமையகத்தைக் கொண்டுள்ள மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர் மத்திய ஆயுத காவற் படையாகும் (CAPF- central armed police force).
மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையானது தொடக்கத்தில் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்காக (PSUs-Public sector Undertakings) 1968-ஆம் ஆண்டு மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை சட்டத்தின் கீழ் (Central Industrial Security Force Act, 1968) உருவாக்கப்பட்டது.
எனினும் 1983-ஆம் ஆண்டு இச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் (Amendment) மூலம், மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையானது பெரிய அதிகார பணி வரம்புடைய ஓர் ஆயுதப் படையாக (armed force) மாற்றப்பட்டது.
தீ விபத்துகளை எதிர்கொள்ள இப்படையில் தீ தடுப்புப் பிரிவு (Fire wing) ஒன்றும் உள்ளது.
தற்போது இதன் பொது இயக்குநராக ஐ.பி.எஸ் அதிகாரியானP. சிங் உள்ளார்.
இவை நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் வி.ஐ.பிகளுக்கு பாதுகாப்பு வழங்குகின்றன. மேலும் மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படையானது பேரிடர் மேலாண்மை பணிகளிலும் ஈடுபடுகின்றது.